உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி மத்தியஸ்தராக செயல்படுவாரா என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்கிறது. இதில் ஏராளமானோர் பலியாகியுள்ள நிலையில், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவுடனான நீண்ட நாள் நட்பை பயன்படுத்தி, இந்திய பிரதமர் மோடி இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் ஏற்றுமதி மற்றும் இருக்குமதியில் இந்தியா- உக்ரைன் இடையே நல்ல நட்பு உறவு நீடிப்பதாக குறிப்பிட்ட அவர், உக்ரைன்- ரஷ்யா விவகாரத்தில் மோடி தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.