0 0
Read Time:2 Minute, 5 Second

வடலூர் நகராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்புராயலு, கமிஷனர் குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், என்ஜினீயர் சிவசங்கரன், துப்பரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், சாகுல் அமீது, மாயவேல், சிவக்குமார், பிரபு, அர்ஜுனன், மாலதி, சித்ரா, வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டு பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி தலைவர் சிவக்குமார் கூறுகையில் நகராட்சி பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சி வளர்ச்சி பணிக்கு வரிவசூல் இன்றியமையாததாக உள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் வரி வசூல் செய்வதில் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார். கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது, மாத பூசத்தன்று மதுக்கடைகள், இறைச்சிக்கடைகள், அசைவ உணவகங்களை மூடவும், விற்பனை செய்வதை தடை செய்யவும் வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் என்ஜினீயர் சிவசங்கரன், துப்பரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், எழுத்தர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %