மயிலாடுதுறை, ஏப்ரல்- 01;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக பொதுசுகதாரத்துறை சார்பாக காசநோய் தின விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24ம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்களிடையே விழிப்புணர்வை எற்படுத்துவதற்க்காக பேரணி நடத்தப்படுகிறது. இப்பேரணியில் எஸ்.கே. செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவியர்கள், சி.சி.சி. சமுதாய செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட மாணவியர்கள் விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் வரை நடந்து சென்றனர். இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக உலக காச நோய் தின விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா முன்னிலையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர், ஊரக நலப்பணிகள் மருத்துவர் என்.சிவக்குமார், துணை இயக்குநர் (சுகாதாராப் பணிகள்) மருத்துவர்.பி.குமரகுருபரன், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) மரு.பி.சங்கீதா, சி.சி.சி. சமுதாய செவிலியர் பயிற்சி கல்லூரி செயலர் வி.லெட்சுமி பிரபா, முதல்வர் ஆர்.காமேஷ். மயிலாடுதுறை வட்டார மருத்துவ அலுவலர் மரு.சரத்சந்தர் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.