சிதம்பரம் நகராட்சியில் வரி மேல் முறையீட்டு குழு, நியமன குழு, ஒப்பந்த குழுவிற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. நகராட்சி ஆணை யாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் தேர்தலை நடத்தினர். இதில் வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக திமுக ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், ரமேஷ், காங்கிரஸ் தில்லை மக்கீன் போட்டியின்றி தேர்வாகினர். ஒப்பந்த குழு உறுப்பினராக திமுக சுதாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சிதம்பரம் நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் நகர்மன்ற கொறடாவாக ஜேம்ஸ் விஜயராகவன் தேர்வானார். கவுன்சிலர்கள் கவிதா சரவணன், இந்துமதி அருள் சுகாதார மேம்பாட்டு குழுவிலும், கவுன்சிலர்கள் அறிவழகன், கல்பனா குடிநீர் வினியோக கண்காணிப்பு குழுவிலும் இடம் பெற்றுள்ளனர். தெரு மின் விளக்கு பராமரிப்பு குழுவில் விஜயலட்சுமி, சுந்தரி ஆகியோரும், பாதாள சாக்கடை கண்காணிப்பு குழுவில் ராஜன், ஷகிலா ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாகன பராமரிப்பு குழு வில் நகராட்சி கவுன்சிலர்கள் சரவணன் குணசுந்தரி ஆகியோரை நியமித்து நகர்மன்றத் தலைவர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
நிருபர்:பாலாஜி