0 0
Read Time:2 Minute, 10 Second

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 39 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,887 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,14,578ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால்  கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 284 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %