0 0
Read Time:2 Minute, 39 Second

தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தையொட்டி வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வருகிற 16-ம் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ம்தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

தஞ்சை பெரியகோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக அடுத்தமாதம் (மே) 14-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %