0
0
Read Time:1 Minute, 7 Second
1918ஆம் ஆண்டு, மதுரையைச் சுற்றி பத்து மைல் தூரத்திற்கு, எந்தக் கூட்டமும் நடத்தக் கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்து இருந்த போது,
1918ஆம் ஆண்டு, மதுரையைச் சுற்றி பத்து மைல் தூரத்திற்கு, எந்தக் கூட்டமும் நடத்தக் கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்து இருந்த போது, ராணுவத்தையே வரவழைக்கும் அளவுக்கு பிரமாண்ட கூட்டத்தை நடத்திக் காட்டியவர்தான் பெ.வரதராஜுலு நாயுடு.
தன் மனைவியின் தங்க நகைகள் அனைத்தையும், தேசப் பணிக்காக காந்தியடிகளிடம் வழங்கினார். “பிரபஞ்ச மித்திரன்” “தமிழ்நாடு” போன்ற இதழ்களை நடத்தி அதன் மூலம் தேசபக்தக் கருத்துக்களை பரப்பி வந்த வரதராஜுலு நாயுடு, அதில் வெளி வந்த கட்டுரைகளுக்காகவும் பல முறை சிறைவாசம் அனுபவித்தவர்.