0 0
Read Time:1 Minute, 56 Second

புதுப்பேட்டை அருகே, எனதிரி மங்கலத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.1¼ கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுப்பேட்டை, பண்ருட்டி தாலுகா அண்ணாகிராமம் ஒன்றியம் எனதிரிமங்கலம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி, வீட்டு மனை பட்டா, முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடம் பெற்றார்.

நிகழ்ச்சியில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கலந்துகொண்டு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 430 பேருக்கு ரூபாய் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பலராமன், தலைமையிடத்து துணை தாசில்தார் கிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் மோகன், மண்டல துணை வட்டாட்சியர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் சேகர் மற்றும் அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, விஜயா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %