0 0
Read Time:1 Minute, 37 Second

குத்தாலம் அருகே, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குத்தாலம் அருகே உள்ள கடலங்குடி ஊராட்சி மற்றும் சேத்திரபாலபுரம் ஊராட்சியை இணைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வாணாதிராஜபுரம், கடலங்குடி, திருவேள்விகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவமனை, பணிக்கு செல்வோர் உள்ளிட்ட பலரும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை செல்ல இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் இரவு நேரங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.
சீரமைக்க வேண்டும் ஆகவே, பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %