0 0
Read Time:3 Minute, 56 Second

தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, குடியாத்தம், காவேரி பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 50 முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என செயல்பட்டு வருகின்றன.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால் ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலையை ரூ 2-ஆக உயர்த்தினர். இது ஓரளவுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்க தொடங்கி வரும் நிலையில் கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களை மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கினர். இதையெடுத்து கடந்த மாதம் 22-ம்தேதி நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை ரூ. 300 இருந்து 350-ஆக உயர்த்த முடிவு செய்தனர்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த விலை நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த முடிவினை மொத்த வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 31-ம் தேதி கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் தொடர்ந்து தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலை அதிகரித்து வருவதால் பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் நிலை உள்ளது. எனவே ஏப்ரல் 6 முதல் 17-ம் தேதி வரை ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்வது என்றும், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்தியரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 30 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %