1 0
Read Time:1 Minute, 56 Second

வெளிப்பாளையம், மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்தில் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-நாகை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களில் பயணிகள் ஏற்றி செல்லப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், மேலும் விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த ஒரு மாதத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் எனது தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, நல்லதம்பி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டோம்.

இந்த சோதனையில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம விதிக்கப்படும். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %