ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பண்டிட் தீன்தயால் உபத்யாய் தேசிய நலநிதி திட்டத்தின்கீழ் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அழைப்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை இரா.லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.5,000/- வீதம் வழங்கும் பண்டிட் தீன்தயால் உபத்யாய் தேசிய நலநிதி திட்டத்தின்கீழ் (PDUNWFS) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிகள் : தமிழகத்தில் வாழும் ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச தகுதி : தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் : தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய போட்டிகள் மற்றும் தேசிய சாம்பின்ஷிப் (முதுநிலை பிரிவு). இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் அல்லது பன்னாட்டு அளவிலான போட்டிகள் அதாவது ஒலிம்பிக் போட்டிகள், பாரா-ஒலிம்பிக். காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய போட்டிகள், பாரா ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலகக் கோப்பை/உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப். காமன்வெல்த் சாம்பியன்ஷிப் முதுநிலை பிரிவு ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் பதக்கம் பெற்றவர்கள் தகுதி உடையவர் ஆவார்கள்.
ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் விளையாட்டு வீரர்கள் மற்றும் இறந்த விளையாட்டு வீரர்களின் குடும்பத்திற்கு உதவி ரூ.5.00 இலட்சம் வரையிலும், விளையாட்டு வீரர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான உதவி ரூ.10,00 இலட்சம் வரையிலும் வழங்கப்படும். மேற்கண்ட விவரப்படி நடந்த போட்டிகளில் (சப்-ஜுனியர் மற்றும் இளநிலை பிரிவு உட்பட) பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்பட்ட காயங்களுக்கான உதவி ரூ.10.00 இலட்சம் வரையிலும், விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் ஆதரவற்ற சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு பயிற்சி, உபகரணங்கள் கொள்முதல் மற்றும் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான உதவி ரூ.2.5 இலட்சம் வரை வழங்கப்படும்.
ஊ. விளையாட்டு மருத்துவர்கள், விளையாட்டு உளவியலாளர்கள், விளையாட்டு வழிகாட்டிகள், பிசியோதெரபிஸ்டுகள். முதுநிலை பிரிவு வீரர்கள் மற்றும் தேசிய அணிகளுக்கான தேசிய பயிற்சி முகாம்களில் இணைக்கப்பட்டுள்ள மசாஜ் செய்பவர்கள் (முதுநிலை பிரிவு). மற்றும் நடுவர்கள், நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் போன்ற பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் (முதுநிலை பிரிவு) மற்றும் சர்வதேச போட்டிகள் (முதுநிலை பிரிவு) ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஆசிய விளையாட்டுக்கள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்களில் உள்ளடங்கிய விளையாட்டுப் பிரிவுகளில் ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் அல்லது இறந்த ஆதாரவாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு : பயிற்சியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்களுக்கான உதவி ரூ.2.00 இலட்சம் வரையிலும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவி ரூ.4.00 இலட்சம் வரையிலும் வழங்கப்படும்.
எனவே, மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மேற்படி திட்டத்திற்கான விண்ணப்பத்தினை நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டு அலுவலத்தில் வந்து நேரடியாக பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் 04.04.2022-க்குள், மாவட்ட விளையாட்டு அலுவலக்தில் நேரடியாகவோ அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 எனும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்.04365-253059 அல்லது 7401703497 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்கள்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.