கிள்ளை பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காதகுப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த இயற்கை உரங்களை பயன்படுத்தி பேரூராட்சி பகுதியில் காய்கறி மற்றும் பழசெடிகளை சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாய் கரையோரம் காலியாக உள்ள இடங் களில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் காய்கறி செடி களை நட்டுவைத்தனர். இதை பேரூராட்சி தலைவர் மல்லிகா முத்துக்குமார், துணை தலைவர் கிள்ளைரவீந்திரன், செயல் அலுவலர் செல்வி ஆகியோர் பார்வையிட்டனர். இயற்கை உரங்களை பயன்படுத்தி செடிகளில் இருந்து கிடைக்கும் காய்கறி, பழங்களை உண்பதால் உடலுக்கு எந்த கெடுதலும் இருக்காது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிருபர்:பாலாஜி