ஆப்ரேஷன் கஞ்சா 2.0 காவல்துறைக்கு சல்யூட்!.மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள செய்தியில்,
“தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் ஆப்பரேஷன் கஞ்சா 2.0 என்னும் தீவிர கஞ்சா வேட்டை இந்த மாதம் முழுவதும் முடுக்கி விடப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் கல்லூரிகள் பேருந்து நிலையம் ரயில் நிலையம் இதர மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டு கஞ்சா விற்பனையை முற்றிலும் முடக்குவதற்கான பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.இவ்வளவு கெடுபிடிகளையும் மீறி இப்படிப்பட்ட கஞ்சா விற்பனை பேர்வழிகள் காவல்துறைக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு சமூக விரதமாக தங்கள் விற்பனையை தொடர்வது வியப்பாக உள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் கஞ்சா உபயோகப்படுத்துவது எதிர்கால சமூகத்தை மட்டுமல்லாது அவர் சார்ந்த குடும்பத்தையே சீரழிக்கும்.
தன்னுடைய மகன் ஒருவன் கஞ்சாவிற்கு அடிமையாகி விட்டான் என்பதை அறிந்த ஆந்திராவின் தாய் வருவர், கோபமடைந்து தன்னுடைய மகனை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து அவனது கண்களில் மிளகாய் பொடியை தூவிய வீடியோ காட்சி வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருவதை ஒவ்வொரு பெற்றோரும் பார்த்து அதிர்ந்து நிற்கின்றனர், அந்த அளவிற்கு தண்டனையை தமிழக தாய்மார்கள் கொடுக்கவில்லை என்றாலும் தம்முடைய மகன் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாத வண்ணம் கண்காணிக்க வேண்டிய மிக முக்கிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு என்பது உறுதி. வெறும் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரால் மட்டும் இளைஞர்களை மாணவர்களை நல்வழிப் படுத்திவிட முடியாது. கஞ்சா விற்பனை செய்வதை பிடிப்பது போல கஞ்சா அருந்துபவர்களை கண்டால் அவர்களைப் பிடித்து திருத்துவதற்கான முயற்சியை இந்த சமூகமும் சேர்ந்து செய்தால் மட்டுமே ஆபரேஷன் கஞ்சா 2.0 நோக்கம் வெற்றியடைய முடியும்.
மிக உன்னதமான இந்த கஞ்சா தடுப்பு புரட்சி நடவடிக்கைகள் மென்மேலும் தீவிரமடைந்து அடுத்தடுத்த மாதங்களில் எந்த ஒரு இளைஞனும், மாணவனும் கஞ்சா அருந்தாத பயன்படுத்தாத நிலையையும், தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் கஞ்சா விற்பனையே இல்லை என்ற நிலையையும் உருவாக்கப்பட வேண்டும். கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். வெளி மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்பவர்கள் அஞ்சி நடுங்குகின்ற வகையில் காவல்துறை நடவடிக்கை அமையும் என்பது உறுதியாக்கப்படவேண்டும்.”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.