0 0
Read Time:1 Minute, 8 Second

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள உரக்கடைகளில் நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் தாசில்தார் வேணி, உர ஆய்வாளர் உமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த உரிமையாளர்களிடம், உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு விற்பனை முனைய எந்திரம் மூலமே உரங்களை விற்பனை செய்யவேண்டும். இருப்பு விவரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டும்.

இதை மீறுபவர்கள் மீது உர கட்டுப்பாட்டு ஆணை மற்றும் வழி காட்டுதலின் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதில் துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %