0
0
Read Time:1 Minute, 14 Second
சென்னை, கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்மைய (polycentric) செயற்கை முழங்கால் அறிமுக விழா நடைபெற்றது.
சென்னை, கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்மைய (polycentric) செயற்கை முழங்கால் அறிமுக விழா நடைபெற்றது.
‘கதம்’ என்று அழைக்கப்படும் இந்த ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பை தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோர் ஐஐடி வளாகத்தில் அறிமுகம் செய்தனர்.
உறுதி வாய்ந்த எவர்சில்வர் மற்றும் அலுமினியம் அலாய், கடினமான குரோம் பூசப்பட்ட பாலிமர் சுழல் உருளை ஆகியவற்றைக் கொண்டு இந்த செயற்கை முழங்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.