மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் 50,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததால் அந்தப் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் தாதம்பட்டி, கட்டகுலம், சின்ன இலந்தை குளம், வைரவநத்தம், கல்லணை, பாலமேடு ஆகிய பகுதிகளில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் நனைந்த நிலையில் உள்ள நெல் மூட்டைகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டி, தனிச்சியம், சின்ன இலந்தகுளம், வைரவநத்தம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கி நிற்கும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் இன்று பெய்த பலத்த மழையில் முற்றிலுமாக நனைந்து சேதம் அடைந்து விட்டதாக விவசாயிகள் கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.
தமிழக அரசு உடனடியாக விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் மழையில் நனைந்து வீணான நெல்லுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து அங்குள்ள விவசாயிகள் கூறும்போது சர்வீஸ் சாலையில் நெல்லை கொட்டி வைத்து இருப்பதால் வெயில் மற்றும் மழை காலங்களில் நெல் மூட்டைகளின் எடை குறைந்து வருவதாகவும் திடீரென பெய்யும் மழையால் நெல் நனைந்து முளைத்து விடுவதால் அதிகாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் மழை பெய்யும் தருணத்தில் அரிசியாக மழை நீரில் நனைந்து சாலைகளில் தேங்குவதாகவும் மேலும் மழையில் நனையும் நெல் மூட்டைகள் சாலை ஓரங்களில் நெல் அரிசியாக தேங்கி வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் நனைந்த நெல்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அடுத்து விவசாயம் செய்ய மானிய உதவியுடன் கடன் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.