சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் தற்போது முதலாமாண்டு சேர்ந்து உள்ள மாணவர்கள் மட்டும் அரசு கல்லூரிகளை போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும், மற்ற வகுப்புகளுக்கு 4 லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஒரே கல்லூரியில் இரு வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என கண்டித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வாயில் முன்பு ஒன்றுதிரண்டு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் கைகளில் பதாகையை ஏந்தியபடி தமிழக அரசுக்கு கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமுகமாக முடிவை எடுக்க வேண்டும் என்று அரசு கல்லூரிகளை போலவே ஒரே விதத்தில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர்:பாலாஜி