தரங்கம்பாடி, ஏப்.12: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அலுவலர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வளாகம், கண்காணிப்பு நிலையம் ரூ.3 கோடி 66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.
காழியப்பநல்லூர் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் திறப்பு விழாவில் தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவளக்கேற்றி துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதில் இளநிலைபொறியாளர் சுந்தர், தொழில்நுட்ப உதவியாளர் அன்பு செழியன், மாவட்ட அலுவலர்கள் அலுவலர் தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர் துரை, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கருணாநிதி, ஜெயமாலினி சிவராஜ், பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேல்,நிலைய அலுவலர் மொஜிசன், சிறப்பு நிலை அலுவலர் அருண்மொழி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.