0 0
Read Time:2 Minute, 14 Second

சென்னை, பெரியமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வாகன சோதனை நடந்தது. அப்போது குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவரை போலீசார் மடக்கினார்கள். அவர் உடனே, “நானும் போலீஸ்காரன்தான்”, என்று வாகன சோதனை நடத்திய போலீசாருக்கு ‘சல்யூட்’ அடித்தார். அத்தோடு நிற்காமல், போலீஸ் என்பதற்கான அடையாள அட்டை ஒன்றையும் காண்பித்தார்.

வாகன சோதனை நடத்திய போலீசார், அடையாள அட்டையை சரிபார்த்த போது, அது வேறு ஒருவரின் அடையாள அட்டை என்று தெரிய வந்தது.

மோட்டார்சைக்கிளில் வந்த போதை நபர், அதன்பிறகு உண்மையை ஒத்துக்கொண்டார். அந்த போலீஸ் அடையாள அட்டை தனது உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், அவர் செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை செய்கிறார் என்றும், அவரது பழைய அடையாள அட்டையை எனது அட்டை என்று ஏமாற்றினேன் என்றும், போதை நபர் தெரிவித்தார்.

அவரது பெயர் நவீன்ராஜ் (வயது 40). அவர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆம்புலன்ஸ் வேன் டிரைவராக பணி செய்கிறார். பெரியமேடு போலீசார், முதலில் அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மட்டும் வழக்கு போட்டனர்.

பின்னர் துணை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் அரிக்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா புதிய வழக்கை பதிவு செய்தார். போலீஸ் அடையாள அட்டையை காட்டிய குற்றத்திற்காக நவீன்ராஜ் நேற்று கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %