0 0
Read Time:1 Minute, 6 Second

காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த முதலையை பிடித்தனர்.
பின்னர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சிதம்பரம் வனத்துறையினர் லால்பேட்டைக்கு விரைந்து வந்து முதலையை மீட்டனர். பின்னர் அந்த முதலை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பிடிபட்ட முதலை சுமார் 4 அடி நீளமும் 400 கிலோ எடை இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %