0
0
Read Time:1 Minute, 5 Second
திருக்கடையூரில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு நடைபெற்றது.
திருக்கடையூரில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் தனியார் மண்டபத்தில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட தலைவர் சிம்சன், மாவட்ட செயலாளர் துரைராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் நடராஜன் பேசினார்.
இதில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.