0 0
Read Time:2 Minute, 19 Second

குத்தாலம் அருகே, அசிக்காடு முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குத்தாலம் அருகே அசிக்காடு, கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. முன்னதாக கடந்த 3-ந் தேதி சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி மேல குளக்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, வேப்பிலை காவடி, சக்தி கரகம் உள்ளிட்டவற்றை எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழிகயாக வந்து கோவிலை அடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அசிக்காடு கிராம மக்கள் செய்திருந்தனர்.

பூம்புகார் அருகே மேலையூர் ராசாங் குளம் ராஜகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால் காவடி, சக்தி கரகம், பன்னீர் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %