மயிலாடுதுறை – தரங்கம்பாடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை இரயில் நிலையம் முன்பு மயிலாடுதுறை – தரங்கம்பாடி இடையே இரயில் பாதையை மீண்டும் அமைக்க கோரியும், தரங்கம்பாடியில் இருந்து காரைக்கால் வரை புதிய இரயில் பாதை அமைக்க வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை வர்த்தக சங்க தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார் தமிழகம் விவசாய தொழிலாளர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் ஜெக.முருகன் வரவேற்றார்.
ஏற்கனவே இயங்கி வந்த மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரெயில் பாதை மீண்டும் அமைக்க வேண்டும். ஆன்மிக தளமான திருக்கடையூர், டேனிஷ் கோட்டை அமைந்துள்ள தரங்கம்பாடி ஆகியவற்றிற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் மீண்டும் அந்த இரயில் பாதையை அமைத்து, காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன், சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே நிலைய மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.