0 0
Read Time:3 Minute, 51 Second

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் தாய்-மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விருத்தாசலம், வட கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

இதேபோல் காட்டுமன்னார்கோவில், வேப்பூர், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், கொத்தவாச்சேரி, லால்பேட்டை, குப்பநத்தம் என மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 44 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் ஒரு மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் கனமழையின் போது விருத்தாசலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

விருத்தாசலம் அருகே, உள்ள க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கோமதி (வயது 40). இவர்களுக்கு முத்து என்ற மகனும், சத்யா, சந்தியா என்கிற 2 மகள்களும் உள்ளனர். இதில் கிருஷ்ணமூர்த்தியும், முத்துவும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். சத்யா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

இதனால் கோமதி, தனது மகள் சந்தியாவுடன் க.இளமங்கலத்தில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் சுவர் முழுவதும் நனைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று காலை கோமதி வேலைக்கு சென்ற நிலையில், சந்தியாவும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டார்.

அந்த சமயத்தில் வீட்டின் மேற்கூரை முழுவதும் திடீரென இடிந்து வீட்டிற்குள்ளேயே விழுந்தது. அப்போது வீட்டில் கோமதியும், சந்தியாவும் இல்லாததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து அறிந்த விருத்தாசலம் தாசில்தார் தனபதி, கிராம நிர்வாக அலுவலர் ரேகா மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டை இழந்த கோமதி குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %