கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி வரவேற்றார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
அரசு சிறப்பு டாக்டர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 124 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், கொள்ளிடம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.