0 0
Read Time:1 Minute, 36 Second

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்,குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது.

குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %