வெளிப்பாளையம், நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு, அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணை தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் சங்க தலைவர் செல்வராஜ், போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்க தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆா்ப்பாட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
70 வயது நிறைவுபெற்றவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பனர். முடிவில் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.