0 0
Read Time:2 Minute, 40 Second

சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலடி இந்திரா நகர் உள்ளது. இந்த நிலையில் நிர்வாக வசதி காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு ரமேஷ்பாபு தலைமையில், நகர மன்ற துணை தலைவர் முத்து மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து இது தொடர்பாக சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு தாசில்தார் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். இதில் ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார், சிதம்பரம் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் இந்திரா நகர் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில், சிதம்பரம் ரெயிலடி இந்திராநகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் செல்லும் வழியில் ரெயில்வே நிர்வாகம் சுற்றுச்சுவர் கட்ட உள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே நாங்கள் வெளியே சென்று வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் நகர மன்ற துணைத்தலைவர் முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %