சிதம்பரம் காந்தி சிலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போலீஸ்காரர் நடராஜ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது விதிமுறைகளை மீறி 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இருசக்கார வாகனங்களை ஓட்டி வந்தது தெரிந்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த சிறுவர், சிறுமிகளிடம், 18 வயதுக்கு கீழ் உள்ள உள்ளவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டக்கூடாது, அனைவரும் லைசன்ஸ் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கி எச்சரிக்கை செய்து அனுப்பினர். தொடர்ந்து அப்பகுதியில் பேருந்தில் அதிகப்படியான பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநரை எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.