குடிநீர் குழாய் செல்லும் இடத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தவிர்த்து எதிர்ப்புறம் புதிதாக கால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது சாக்கடை கால்வாய்கள் அமைக்க பள்ளம் தோண்டும்போது குடிநீர் பைப் உடைந்து சேதம் அடைந்துள்ளது. பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட VMP நகரில் தற்போது சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய்கள் இல்லாமல் VMP நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வெளியில் செல்ல வழி இல்லாததால் மழை நீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர்.
தற்போது பேரூராட்சி மூலம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அப்பகுதி மக்கள் மிகவும் அதை வரவேற்கின்றனர். ஆனால் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும் தற்போது நடைபெறும் வேலையாக உள்ளது எனவும் காரணம் எங்கள் பகுதியில் குடிநீருக்காக பூமிக்கடியில் செல்லும் பைப் லைன் சொல்லும் பாதையின் மேலேயே பள்ளம் தோண்டி சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் பைப்பு மேலே சாக்கடை கால்வாய் அமைப்பதால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உயிர் போகும் நிலை ஏற்படுமென அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் தற்போது பள்ளம் தோண்டும் பொழுதே பல இடங்களில் பைப்பு உடைந்து விடுகிறது.
அதை வேலை செய்வோரிடமும் சொன்னால் எதையும் காதில் வாங்காமல் உடைந்த பைப்பை சரி செய்து அதன் மேலே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தொடங்குகின்றனர் ஆகையால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் இதை ஆய்வு செய்து குடிநீர் பைப் லைன் செல்லும் பாதையில் சாக்கடை கால்வாய் அமைக்காமல் எதிர்ப்புறம் சாக்கடை கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென VMP நகரில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்