0 0
Read Time:3 Minute, 2 Second

சொசைட்டியில் உள்ள தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி பேரணியானது 4-ந் தேதி நடக்கிறது.

நெய்வேலி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு போலீசார்அனுமதி அளிக்காததால் பொது கூட்டம் நடைபெற்றது. இதற்கு என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு நல சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் பூவராகவன், நிர்வாகி தாண்டவராயன், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி, பிரசார செயலாளர் முனியன், இன் கோசர்வ் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டார் கார்த்தி மூவேந்தர், இன் கோசர்வ் ஹவுசி கோஸ் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருளானந்தன், பொருளாளர் சுந்தரேசன், நாம் தமிழர் தொழிற்சங்க பாசறை நிர்வாகிகள் கனகவேல், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி மாநில செயலாளரும் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு செயலாளருமான சேகர் கலந்துகொண்டு பேசும்போது, சொசைட்டியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதுவரை மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களையும் சேர்த்து சொசைடியில் இணைக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(மே) 4-ந் தேதி நெய்வேலியில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று என்.எல்.சி. அதிபரிடம் முறையிடுவோம் என்றார்.

முடிவில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %