மணல்மேட்டை அடுத்த, தலைஞாயிறு பகுதியில் சர்க்கரை ஆலை உள்ளது. இதன் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து உள்ளது. நிழற்குடையின் உள்ளே குப்பைகளும், அதன் பிற்புறம் முட்செடிகளும் வளர்ந்து உள்ளன. பஸ் பயணிகள் அமரும் இடம் உடைந்து காணப்படுகிறது.
மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
நிழற்குடை பழுதடைந்து உள்ளதால் பஸ்சிற்காக காத்திருப்பவர்கள் வெளியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெயில் அதிகமாக உள்ளதாலும், திடீரெ மழை வருவதாலும் நிழற்குடையின் உள்ளே நிற்க முடியாமல் பஸ் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகவே, பழுதடைந்த இந்த நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.