0 0
Read Time:2 Minute, 33 Second

கடலூரில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் தம்பதி உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடலூர், நெல்லிக்குப்பம் காந்திநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 62). இவர் தனது மனைவி பார்வதியுடன் நேற்று மதியம் 12.45 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூருக்கு காரில் வந்தார்.

காரை மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த கொளஞ்சி நாதன் (42) என்பவர் ஒட்டினார். அவர்கள் வந்த கார் செம்மண்டலம் வளைவில் திரும்பி கம்மியம்பேட்டை சாலையில் சென்ற போது, தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னை மரம் சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் விழுந்தது. மின்கம்பி பாரம் தாங்காமல் அறுந்து தென்னை மரத்தோடு விழுந்தது.

இதில் தென்னை மரம் அவர்கள் சென்ற காரின் முன்பக்கத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் தென்னை மரம் ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த வாகன ஓட்டிகள் உதவியுடன் தென்னை மரத்தை அகற்றி, காரை அப்புறப்படுத்தினர்.

மேலும் தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்து, மின்சார கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் கார் மீது தென்னை மரம் விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %