சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கிக் வருகிறது.
இந்த கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது இரண்டாமாண்டு மூன்றாமாண்டு உள்ளிட்ட மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தின் ஒருவகையாக தாங்கள் அணிந்திருக்கும் வெள்ளை நிற கோட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி