திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத் தலைவர், துணை செயலாளர் உள்ளிட்ட 9 பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனுதாக்கல் ஆக்கூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், கட்சியின் அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் கோ.சூரியமூர்த்தி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய மாவட்ட செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் மனுதாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் பவுன்ராஜிக்கு ஆதரவாக 8 பேர் விருப்பமனு அளித்தனர்.
இதேபோல மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தனர்.
மாவட்டத்தில் உள்ள 9 பதவியிடங்களுக்கு 38 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கலின்போது கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.