0 0
Read Time:1 Minute, 27 Second

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் வசித்து வந்தவர் செல்லையா மகன் கிருபாநிதி(வயது 29). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நெய்வேலி 2-வது வட்டம் தந்தை பெரியார் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென கிருபாநிதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருபாநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %