0 0
Read Time:2 Minute, 8 Second

மயிலாடுதுறையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்!

மயிலாடுதுறையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக நோயாளிகள் புகார். உணவை வாங்க மறுத்து வாக்குவாதம் செய்யும் காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் கொரோனா பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு தொற்றுடையவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மூன்று வேளையும் அரசு சார்பில் உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவை உண்ண முடியாமல் கீழே வீசி எறிகின்றனர். இன்று காலை உணவு வழங்கிய போது அதனை வாங்க மறுத்து மீண்டும் திருப்பி அனுப்பினர்.

காவல்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். தனியார் மருத்துவமனைகளில் சேர வசதி இல்லாத ஏழைகள் இங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், உணவு தரமற்று இருப்பதால், அதனை உண்ண முடியவில்லை. தரமான உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதை செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %