0 0
Read Time:2 Minute, 11 Second

கடலூர், மதுரையில் இருந்து வடலூர் வழியாக கடலூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் வடலூருக்கு நேற்று காலை 9 மணி அளவில் வந்தது. அந்த பஸ்சில் ஏறிய ஒருவர் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.

அந்த பஸ் காலை 9.55 மணி அளவில் கடலூர் பஸ் நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற நிலையில், வடலூரில் ஏறிய நபர் மட்டும் இறங்கவில்லை. அவர் தூங்கி விட்டதாக நினைத்த கண்டக்டர் அவரை எழுப்பினார்.

ஆனால் அவர் மூச்சு பேச்சு இன்றி இருக்கையிலேயே இருந்தார். இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதனை செய்த போது, அவர் இறந்த விட்டது தெரிய வந்தது.

இதற்கிடையில் தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து இறந்தவர் பற்றி போலீசார் விசாரித்த போது, அவர் புவனகிரி அருகே மேல்வளையமாதேவி மன்மதன்கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் ராஜேந்திரன் (வயது 48) என்றும், தொழிலாளி என்றும் தெரிந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் ஓடும் பஸ்சில் தொழிலாளி இறந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %