0 0
Read Time:6 Minute, 55 Second

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம், அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்த விவரம் வருமாறு:-

25-வது வார்டு முத்தமிழன் (தி.மு.க.):- நெல்லிக்குப்பம் நகராட்சியில் புதிதாக போடப்படும் தெரு மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. ஆகவே தரமான மின்விளக்குகளை பொருத்தவேண்டும். மேலும் துப்புரவு பணியாளர்கள் சரியான முறையில் குப்பைகளை அள்ளிச் செல்வதில்லை.

ஜெயந்தி (தலைவர்):- உங்கள் வார்டு பகுதி மக்கள் குப்பைகளை தெருவிலும், கால்வாய்களிலும் கொட்டுகிறார்கள். இதனை கண்காணித்து வீடு வீடாக வரக்கூடிய துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகள் கொடுப்பதற்கு மக்களை அறிவுறுத்தினால் குப்பைகள் சேராமல் சுத்தமாக இருக்கும்.

5-வது வார்டு கவுன்சிலர் சரவணன் (தி.மு.க.):- நெல்லிக்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். இதனை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4-வது வார்டு ஹேமா (தி.மு.க.):- எனது வார்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வார வேண்டும்.
இக்பால் (ம.ம.க.):- நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெறும் சாலை பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
ஜெயந்தி (தலைவர்):- கூட்டத்தில் கவுன்சிலர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் கடந்த 39 ஆண்டு காலமாக இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சியில் தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளவும், உரிய நிதியை பெற்று நகரப் பகுதியை செம்மையாக மேம்படுத்த வேண்டி நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %