0 0
Read Time:1 Minute, 23 Second

கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையிலான ஊழியர்கள் பண்ருட்டி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் முத்திரை இடாத தராசு மற்றும் எடைகற்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே வணிகர்களிடம் இருந்து 44 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் கூறுகையில், சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி உரிய முத்திரை இடாமல் வணிக பயன்பாட்டில் உள்ள தராசுகளை பயன்படுத்தக்கூடாது.

மீறி பயன்படுத்தினால் தராசுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, குறைந்தபட்ச அபராதமாக ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் தங்கள் உபயோகத்தில் உள்ள எடையளவு கருவிகளை தொழிலாளர் அலுவலகத்தில் உரிய முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %