0 0
Read Time:2 Minute, 36 Second

புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேரை பரங்கிப்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் சிதம்பரம் நோக்கி கடத்தி வருவதாக பரங்கிப்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் உடனே சிதம்பரம்-கடலூர் சாலையில் பெரியகுமட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற காரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் மூட்டை, மூட்டையாக 5 சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 5 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த குமரவேல் மகன் வெங்கடேஷ்(வயது 21), சிதம்பரம் அடுத்த கொத்தட்டை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் சபரிகிரி(40), விருத்தாசலம் செம்பளாக்குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து மகன் ரகுநாத்(34) ஆகியோர் என்பதும் புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் பகுதிக்கு காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %