0 0
Read Time:2 Minute, 19 Second

கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலனியால் தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துனைதலைவரை கைது செய்ய கோரி கிராமமக்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவகாசி-கலியமூர்த்தி. சரண்யா-குமார் என்பவர் துணைத்தலைவராக உள்ளார்.

இன்று மே 1 ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்பார்வையாளராக இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது பின் பக்கமாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை துனைத்தலைவர் சரண்யா-குமார் தன் காலில் அணிந்த காலனியை கழட்டி தாக்கியுள்ளார் என புகார் தெரிவித்து பின்னர் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் வருவதற்குள் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முற்பட்டால் நிலைமை வேறுவிதமாக மாறக்கூடும் என உணர்ந்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி சுந்தரம் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற துனைதலைவர் சரண்யா குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %