மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வடிவேல் வரவேற்றார். இதில் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுமதி கலந்துகொண்டு பேசினார்.
இதில் மேக்கிரிமங்கலம், ஆனாங்கூர், இலங்காரங்குடி, மாந்தட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இதேபோல பழையகூடலூரில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமையிலும், கிளியனூரில் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது தலைமையிலும், திருவாலங்காட்டில் ஊராட்சி மன்ற தலைவர் கதம்பவள்ளி சின்னையன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
திருவெண்காடு ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் தலைமையில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கார்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு செலவு கணக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு புதிய வடிவிலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
ராதாநல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் அகோரம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மணிக்கிராமம், பூம்புகார், வானகிரி, மங்கைமடம் உள்ளிட்ட 37 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களை ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையிலும், பிள்ளைபெருமாள்நல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி தலைமையிலும், டி.மணல்மேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி துரைராஜன் தலைமையிலும், கிள்ளியூரில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும், ஆக்கூரில் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரமோகன் தலைமையிலும், காலமநல்லூரில் ஊராட்சி மன்றத்தலைவர் நடராஜன் தலைமையிலும், கிடங்கலில் ஊராட்சிமன்ற தலைவர் அமுதா அன்பழகன் தலைமையிலும், மாமாகுடியில் ஊராட்சி மன்றத்தலைவர் விஜயா கோபிநாத் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதேபோல் மடப்புரம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் மெஹ்ராஜின்னிசா செல்வநாயகம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபபெற்றது.மருதம்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் சுமதி மதியழகன் தலைமையில் கிராமசபை நடைடிஜிட்டல் முறையில் நடந்தது.
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் விளந்திட சமுத்திரமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் தியாகராஜன் வரவேற்றார்.
இதில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.
திட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையிலும், தில்லைவிடங்கனிர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரவேலு தலைமையிலும், செம்மங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமையிலும், சட்டநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமையிலும், எட்டுக்குடி வடபாதியில் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
அகணியில் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையிலும், வள்ளுவக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மா தலைமையிலும், நிம்மேலியில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமையிலும், கொண்டலில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயின் தலைமையிலும், புங்கனூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.