Read Time:3 Minute, 36 Second
குமராட்சி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராமசமை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றிய காசாளர் ஜெய்சங்கர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுகுணா வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளவழன் சுகாதார ஆய்வாளர் ராஜாராம் ஊரக வாழ்வாதார இயக்கம் மேனேஜர் திருமாவளவன் இடைநிலை ஆசிரியர் விஜயன் நாய விலை கடை விற்பனையாளர் தாமோதரன் மீன்வள ஆய்வாளர் தியோடர்ராஜ் உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் பாலாஜி நாகேந்திரன் ஊராட்சி துணைத் தலைவர் உமா மகேஸ்வரி விஜயகுமார் ஊராட்சி செயலர் சிலம்பரசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
- குமராட்சி கடைவீதியில் பொதுக்கழிப்பிடம் கட்டுவது 2.நீர்நிலை ஆதாரங்களை பாழாக்கும் கருவேல் மரங்களை ஊராட்சி மூலம் அகற்றுவது
- சமுதாயக்கூடம் கட்டுவது
- நீர் புறம்போக்கு மற்றும் புறம்போக்கில் வசிக்கின்ற நபர்களுக்கு இப்பகுதியில் இலவச மனை பட்டா வழங்குவது
- குமராட்சியில் மின்சார தகன மேடை அமைத்துக் கொடுப்பது
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அட்டைதாரர்களுக்கு அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது
- குமராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்களை அமைத்து நோயாளிக்கு தேவையான மருந்துகளை வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது
- குமராட்சி ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை போக்க கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் முழுமையாக அனைவருக்கும் தண்ணீர் சென்றடைய மேற்கொள்ளப்பட வேண்டும்
- குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயில்கின்ற மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக கழிப்பிட கட்டிடம் கட்டி தரப்பட வேண்டும்
- தேசிய நெடுஞ்சாலை NH227 குமராட்சி இணைக்கும் பகுதியில் பேருந்து நிலையம் கட்டித் தரப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உடன் இளஞ்செழியன் திருமேனி ரெங்கநாதன் செல்வராணி ஆர்கே.பாவாடை கலைவாணன் மணி தமிழரசன் இளையராஜா பாக்யராஜ் புகழேந்தி ராஜலட்சுமி கவிதா ஆனந்தவல்லி சிறுத்தை பாபு ஆனந்த் பாலு சுபா சசிரேகா ஆகியோர் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி