ஸ்ரீமுஷ்ணம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் தமிழக
முதல் – அமைச்சரின் மஞ்சள் பை இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த விழாவுக்கு ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வட்டார ஆத்மா குழு தலைவருமான தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன் அனைவரையும் வரவேற்றார். அரிமா மாவட்ட தலைவரும், தவஅமுதம் பள்ளி தாளாளருமான எம்.எஸ்.செங்கோல், ரோட்டரி சங்கத் தலைவர் ஆனந்த.வீரவேல், பூவராகசுவாமி கோவில் அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, அதற்கான இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செந்தில்வேலன், ஒன்றிய துணைச் செயலாளர் பத்மநாபன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், 10-வது வார்டு செயலாளர் பார்த்திபன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், 15-வது வார்டு செயலாளர் ஜேம்ஸ், எஸ்.பி.ஜி. வித்யாலயா பள்ளி செயலாளர் பார்த்தசாரதி, 4-வது வார்டு செயலாளர் ராஜசேகர், ரவிசுந்தர் குருக்கள், துரை, சோலையப்பன், வேலாயுதம், பரிமளசுந்தரம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா செயலாளர் பூவராகமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக பள்ளிவாசலில் நடந்த ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.தொடக்க விழாவின்போது பொதுமக்களிடம் 2500 மஞ்சள் பை வழங்கப்பட்டது.