0 0
Read Time:2 Minute, 18 Second

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 16 முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழில் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலை, கிலோவுக்கு 40 ரூபாய் உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.403-க்கும், 24-ம் நம்பர் ரூ.415-க்கும், 30-ம் நம்பர் ரூ.425-க்கும், 34-ம் நம்பர் ரூ.445-க்கும், 40-ம் நம்பர் ரூ.465-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.395-க்கும், 24-ம் நம்பர் 405-க்கும், 30-ம் நம்பர் ரூ.415-க்கும், 34-ம் நம்பர் 435-க்கும், 40-ம் நம்பர் ரூ.455-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றத்தை கண்டித்து, திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் தேவைக்கு போக மீதம் இருக்கும் பஞ்சு மற்றும் நூலினை மட்டும் தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், பஞ்சு மற்றும் நூலினை அத்தியாவசிய தேவை பட்டியலுக்கு கொண்டு வந்து பதுக்கலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %