0 0
Read Time:2 Minute, 24 Second

சென்னையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் போலீசார் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை அண்ணாசாலை, தாராப்பூர் டவர் சிக்னல் அருகே கடந்த 29-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் சாகசத்தில் ஈடுபட்ட தியாகராயர்நகர் ராமகாமத்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), தியாகராயர்நகர் ஆர்.கே.புரம் எஸ்-பிளாக் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஓட்டி வந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது 3 பேர் போலீசார் பிடியில் சிக்காமல் தப்பி சென்றுவிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்பேரில் தப்பிச்சென்ற கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர் 7-வது தெருவைச் சேர்ந்த சஞ்சய் (19), அயனாவரம் நேருஜி ஜோதி நகரைச் சேர்ந்த ஜான்ஜெபகுமார் (19) ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சாகசத்தில் ஈடுபட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள் பந்தயம், சாகசம் போன்ற ஆபத்தான வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள் மீது தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %