0 0
Read Time:1 Minute, 45 Second

விருத்தாசலம், விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடியபடி கொடியை பவனியாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை திருத்தல அதிபர் தேவசகாயராஜ் கொடியை ஏற்றினார்.

அப்போது கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மலர் தூவி வழிபட்டனர். தொடர்ந்து பாத்திமா அன்னை ஆலய பங்குதந்தை பால்ராஜ் குமார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

பெருவிழாவையொட்டி வருகிற 12-ந்தேதி வரை சிறிய தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து 14-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %