மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதா மாவட்ட தலைவர் மனு அளித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமரவைத்து தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டினப்பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்லும் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்துச் செய்ய வேண்டும்.
அன்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் நேரில் வந்து பல்லக்கை தூக்க உள்ளனர். இதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அப்போது பா.ஜனதா வக்கீல் அணி பிரிவு மாநில பொறுப்பாளர் வக்கீல் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், நகர தலைவர் மோடி கண்ணன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில்பாலு உள்ளிட்ட பலர் இருந்தனர்.